அருள்மிகு நாகமுத்து மாரியம்மன் ஆலய செடல் உற்சவ கொடியேற்றம்

63பார்த்தது
புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற நைனார் மண்டபம் அருள்மிகு நாக முத்து மாரியம்மன் ஆலயத்தின் 41-ம் ஆண்டு செடல் உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விநாயகர் பூஜை உடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏரிக்கரை அருள்மிகு துலுக்கானத்தம்மன் ஆலயத்தில் இருந்து புனித நீர் சக்தி கரகம் எடுத்து வந்து கோவிலில் கொடியேற்றமும் காப்பு கட்டுதலும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பாற்சாகை வாற்றல் என்கிற கூழ் ஊற்றும் வைபவம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு நாகமுத்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்

செடல் உற்சவத்தையொட்டி தினந்தோறும் சிறப்பு வழிபாடு பூஜைகளும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வருகிற 19-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி