அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் செடல் தேர் திருவிழா

82பார்த்தது
புதுச்சேரி, அரியாங்குப்பம், சுப்புராயப்பிள்ளை வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 35-ஆம் ஆண்டு செடல் தேர் பிரம்மோற்சவ திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது, சிறப்பு விருந்தனராக முன்னாள் சேர்மேன் ஆனந்தன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார், கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் அபிஷேக ஆராதனைகள் செய்து அம்மன் திருவீதியுலா நடைபெற்று வந்தது, முக்கிய நிகழ்வான இன்று காலை முத்துமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து மூலவருக்கு சந்தனகாப்பால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனைகள் கான்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் செடல் ஏந்தி தேரில் திருவீதியுலா நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தனராக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மேன் ஆனந்தன் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார், முன்னதாக அவருக்கு விழாக்குழுவின் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் விழாக்குழுவினர் ஹரி, பாபு செந்தில், முத்து, ஆறுமுகம், செல்வம் கனகராஜ் குமார், பாலு, ராஜா, சத்தியமூர்த்தி மற்றும் திரலான பக்கதர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி