ஜூன் 8, 9 தேதிகளில் கலைஞர் நூற்றண்டு விழா கால்பந்து போட்டி

70பார்த்தது
ஜூன் 8, 9 தேதிகளில் கலைஞர் நூற்றண்டு விழா கால்பந்து போட்டி
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கால்பந்து விளையாட்டுப் போட்டி, ஜூன் 8–ஆம் தேதி தொடங்கி ஜூன் 9–ஆம் தேதி மாலை 5. 00 மணிவரை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்திஷ் ஏற்பாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிக்கு மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமை வகிக்கிறார். மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம். எல். ஏ. , முன்னிலை வகிக்கிறார். மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம். எல். ஏ. , வரவேற்று பேசுகிறார்.

மாநில கழக அவைத்தலைவர் எஸ். பி. சிவக்குமார், கழகப் பொருளாளர் இரா. செந்தில்குமார், எம். எல். ஏ. , ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

கழக கொள்கைப்பரப்புச் செயலாளர், முன்னாள் துணைவேந்தர் முனைவர் சபாபதிமோகன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கால்பந்து விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.

தொடர்புடைய செய்தி