புதுவை: ஒன்றிய நிதிநிலை அறிக்கையை எதிர்த்து AIUTUC ஆர்ப்பாட்டம்

68பார்த்தது
மத்திய தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் இடம்பெறச் செய்யாத மத்திய அரசை கண்டித்தும், பொதுமக்கள், தொழிலாளர், விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை எதிர்த்து அகில இந்திய யுனைடெட் டிரேட் யூனியன் சென்டர் சார்பில் புதுச்சேரி சிவாஜி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.

 செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் சூகி கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் லெனின் துறை, அகில இந்திய நிர்வாக குழு அனவரதன், கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும், மக்களை காவு வாங்கும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் குறையாமல் நிர்ணயம் செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியத்தை உருவாக்க வேண்டும், உ, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி