புதுச்சேரி: அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வாழ்த்து

80பார்த்தது
புதுச்சேரி: அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வாழ்த்து
புதுச்சேரி அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் தமிழ்வேந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,பிறக்கின்ற 2025 ஆம் ஆண்டு புது வருடம் அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் சாதி, மதம், இனம், மொழி, என பிரித்துப் பார்க்காமல் பிறப்பால் நாம் அனைவரும் சமம் என்ற ஒருமித்த உணர்வோடும் என்றும், சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பற்ற இலக்கோடும். 

உழைக்கின்ற வர்க்கத்திற்கு உயர்வு கிடைத்திடவும், இளைஞர்களின் எழுச்சி அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிடவும், நிலம், நீர், காற்று, என கடவுள் தந்த இயற்கை தாயை பாதுகாத்திடவும் இப்புத்தாண்டில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதான ஒரு புதுத்தலத்தை அமைத்திட அருள் தருவாய் இறைவா என எல்லாம் வல்ல கடவுளை வேண்டி எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்புடைய செய்தி