தமிழக முன்னாள் முதல்வர், புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 37 - ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரி அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று உப்பளம் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள எம்ஜிஆரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உட்பட அதிமுகவினர் பலர் திரளாக கலந்து கொண்டனர்.