அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய யார் அந்த சார் என்று அதிமுக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை உருவ படத்தை வைத்து இவர்தான் அந்த சார் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அதிமுக சார்பில் உப்பளம் தலைமை கழக அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்.
வழக்கை திசை திருப்பும் நோக்கில் திமுக அரசு செயல்படுவதாகவும், சம்பந்தப்பட்ட சார் அமைச்சர் மா. சுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.