புதுச்சேரி ஆலன் ஆதித்யா வித்யாஷ்ரத்தின் குருகிராம் நீட் தேர்வு பயிற்சி நிலையத்தில் படித்த 24 மாணவர்கள் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 62 மாணவர்கள் 600-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு புதுச்சேரி ஆலன் ஆதித்யா வித்யாசம குரு கிராம் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆதித்யா வித்யாஷ்ரம் நிறுவனர் திரு ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார். தெற்கு மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ் மற்றும் மையத் தலைவர் சௌரப் திவாரியுடன். இந்த மதிப்புமிகுந்த விருந்தினர்கள் NEET சாம்பியன்களை கவுரவமாகப் பாராட்டி, அவர்களின் கடின உழைப்பும் நேர்த்தியும் பாராட்டினார்கள்.
"NEET 2024 இல் எங்கள் மாணவர்களின் மிகச்சிறந்த செயல்பாட்டால் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், " என்று நிறுவனர் விழாவில் கூறினார்.
"அவர்களின் வெற்றிக்கு எங்கள் நம்பகமான ஆசிரியர்கள் அளிக்கும் உறுதியான ஆதரவுக்கும் சான்றாகும்" என்றனர்.
நிகழ்ச்சியில் தெற்கு மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ், மையத் தலைவர் சௌரப் திவாரி ஆகியோர் கலந்து கொண்டு மேலும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு மருத்துவ துறையில் மாணவர்கள் சிறப்பாக முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.