கணவனின் முகமூடி அணிந்து கணவனுக்காக ஓட்டுகேட்ட மனைவி

2257பார்த்தது
கணவனின் முகமூடி அணிந்து கணவனுக்காக ஓட்டுகேட்ட மனைவி
புதுச்சேரியில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் தமிழ் வேந்தன் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு ஆதரவாக அவரது மனைவி நிவேதிதா தமிழ்வேந்தன் இன்று முதல் தனது கணவனின் முகமூடியை அணிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக புதுச்சேரியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.

புதுச்சேரி அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தையில் சிறு வியாபாரம் செய்யும் பெண்கள் மற்றும் வயதானவர்களிடம் தனது கணவனுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்து அண்ணா சிலை முதல் நேரு வீதி வரை உள்ள கடைத்தெருகளுக்கும் நடந்தே சென்று அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி நோட்டீஸ் வழங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் சென்ற பெண்கள், ஆண்கள் என அனைவரும் வேட்பாளர் தமிழ்வேந்தனின் முகமூடி அணிந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க கோரி வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி