புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கீதா (49).
ஆடி கிருத்திகையையொட்டி இவர் அங்குள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரைப் பின்தொடர்ந்து பல்சர் பைக்கில் வந்த இருவரில் ஒருவர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியக பறித்து சென்றார். இது தொடர்பாக அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.