மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் விஷசாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூத்துறை காட்டு பகுதியில் சாராய விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சாதாரண உடையில் சென்று சாராய விற்பனையை கண்காணித்து வந்த நிலையில், அப்போது வில்லியனூரில் இருந்து புதுைவ சாராயத்தை கேனில் வாங்கி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது தமிழக பகுதிக்கு கள்ளச்சாராயம் கடத்தியவர் அதிரடி கைது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 55) என்பது தெரிய வந்தது. அவர் விற்பனை செய்ய வாங்கி வந்த ஐந்து லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர் மீது கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.