புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஆன்லைனின் சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார் அதில், விளையாட்டில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என இருந்துள்ளது. இதனை உண்மை என நம்பி மேற்கூறிய நபர் ரூ. 2. 05 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். நல்லவாடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை நம்பி ரூ. 27 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ஆண் நபரின் போனில் உள்ள செயலில் மர்மநபர் பணம் கேட்டு லிங்க் அனுப்பியுள்ளார். இதனை மேற்கூறிய நபர், அதனை கிளிக் செய்தபோது. அவரது கணக்கிலிருந்து ரூ. 24 ஆயிரம் எடுக் கப்பட்டது. இதே போல் பலர் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.