புதுவை ஷோரூமில் 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து சேதமடைந்தன

79பார்த்தது
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிக்குப் பம் சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் சிம்கோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் உள்ளது. இந்தநிலையில் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரின் ஸ்கூட்டரில் பழுது ஏற்பட்டதால் அதனை சரி செய்து கொடுக்கும்படி அங்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் அந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அங்கு சர்வீஸ்சுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷோரூம் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எனவே அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக காணப்பட் டது.

இது பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி ராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் ஆகும். தீ விபத்திற்கான காரணம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் கருவடிக்குப்பம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி