புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையில் உள்ள அரசு பள்ளிகளில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 34 பேருக்கு, தலைமை ஆசிரியர்களாக (கிரேடு-2) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார். இதேபோல் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 21 தலைமை ஆசிரியர்கள் (கிரேடு-2) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வரும் காவேரிக்கு, கூடுதல் பொறுப்பாக துணை இயக்குனர் (தொடக்கக்கல்வி) பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை துணை இயக்குனர் (நிர்வாகம்) வெர்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளார்.