புதுச்சேரியில் 2 பேரிடம் ரூ. 56 ஆயிரம் ஆன்லைன் மூலம் மோசடி

65பார்த்தது
புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் தங்கபிரதீப்குமார். இவரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசிய நபரிடம் தங்கபிரதீப்குமார் தனது கிரெடிட் கார்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை தெரிவித்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரத்து 631 அபேஸ் செய்யப்பட்டது.

இதேபோல் கோரிமேடு ஞானபிரகாஷ் என்பவரின் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பிய மர்ம நபர், அவருக்கு தெரிந்த நபரின் பெயரை சொல்லி மருத்துவ தேவைக்காக ரூ. 26 ஆயிரம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த புகாரின்பேரில் புதுவை சைபர் கிரைம் போலீசார் தனித்தனி வழக்காக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி