காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ நளநாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் அதிகாலை பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பரமபதவாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.