காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையமானது புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகத்துடன் இணைந்து ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் என்ற பயிற்சி வயல்வெளி பள்ளியினை நடத்துகின்றது. இதன் துவக்க விழா இன்று(அக்.5) மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பெறக்கூடிய மகளிர்கள் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்த அனைத்து தொழில்நுட்பங்களையும் செயல்விளக்கங்களாக செய்து நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.