காரைக்கால் மாவட்டம் மதுரையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் பட்டியலின விவசாயிகளுக்கு பண்ணைக் கருவிகளை பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்சியானது வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி வழிகாட்டுதலின்படி இன்று நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 30க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் பங்கேற்று பயனடைந்தனர்.