"நமது லட்சியம் விபத்து இல்லா புதுச்சேரி நிச்சயம்" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி புதுச்சேரி போக்குவரத்து போலீசார் தலைக்கவசம் அணிவதன் அவசியம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை புதுச்சேரி மாநில ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.