காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து குறியீடுகள் குறித்தும் காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் லெனின்பாரதி விளக்க உரையாற்றினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.