காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு செண்பக தியாகராஜர், பிரணாம்பாள், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் என அடுத்தடுத்து ஐந்து பிரம்மாண்ட தேர்களில் எழுந்தருள தேரோட்டம் நடைபெற்று வருகிறது.