காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பிரன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் - ஸ்ரீ அலமேலுமங்கை தாயார் திருக்கல்யாணம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாதீபாராதனையும் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் ஆலய அறங்காவலர் குழுவினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.