காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாதர் - ஸ்ரீ சுந்தராம்பாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைதீக முறைப்படி நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து ஸ்ரீ கைலாசநாதருக்கும், சுந்தராம்பாள் தாயாருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.