புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சாகர் பயணத்திட்டம் தொடக்கம், மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் விழா இன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் இணைந்து மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மீன்வளத்துறை இயக்குநர் முஹம்மது இஸ்மாயில், துணை இயக்குநர் சவுந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.