காரைக்காலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி ஆலய கும்பாபிஷேகம் வரும் 05ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து கடங்கள் புறப்பாடாகி ஊர்வலமாக யாக சாலைக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.