காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவினை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அவர்கள் இன்று வெளியிட்டார்கள். இந்நிகழ்வில் துணை மாவட்ட ஆட்சியர் தஜான்சன் மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அரசு பள்ளி ஒன்றும் 100% எடுக்கவில்லை. அரசு பள்ளி 68 சதவீதம் மற்றும் தனியார் பள்ளி 90 சதவீதம் பெற்றுள்ளனர்.