காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தில் உள்ள புதுவை அரசு தொழிலாளர் துறை அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் ஆண்டு விளையாட்டு விழா இன்று தொழிற்பயிற்சி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.