காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள். இதேபோல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.