காரைக்கால் நகரமைப்பு குழுமத்தின் சிறப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வரைவு விரிவான வளர்ச்சித் திட்டம், 2041 இல் பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற அமைப்புக் துறையின் தலைமை நகர அமைப்பாளர் சமர்ப்பித்த குழு அறிக்கை விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை ஆட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.