காரைக்கால் நலவழிதுறையின் துணை இயக்குனர் மருத்துவர் சிவராஜ் குமார் வழிகாட்டுதலின்படி திருநள்ளாறு சமுதாய நலவாழ்வு மையத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி அவர்களின் ஆலோசனையுடன் திருநள்ளாறு சமுதாய நலவாழ்வு மையத்திற்குட்பட்ட பகுதியான தக்கலூர் சிவன் கோவில் தெருவில் வசிக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த வடிகால் சுத்தம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமுதாய நலவாழ்வு மையத்தின் சார்பாக இன்று அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.