காரைக்கால் அடுத்த தலத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ சிவலோக நாதசுவாமி தேவஸ்தானத்தில் அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு ஆடி மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு மகா அபிஷேகம், அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால், வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வந்தனர்.