காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் நேற்று(ஜன. 2) ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்ட நான்கு அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களோடு கலந்து கொண்டு பணிகளை பார்வையிட்டனர். அதன்பின்பு நான்கு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நினைவு பரிசை வழங்கினர். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.