காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவிகளுக்கு டி. சி. பவர் சப்ளை குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் சந்தனசாமி தொடங்கி வைத்து பேசுகையில் 'மாணவிகள் தங்கள் செய்முறை திறன்களை இந்த தொழில்நுட்ப உலகத்தின் போட்டிக்கு ஏற்றவாறு வளர்த்துக்கொள்ள வேண்டும். கருத்தியல் பாடங்களை வளர்த்து கொள்வது குறித்து பேசினார்.