ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மெரினா zone - 28 சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர்க்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு கலைப் பண்பாட்டுத் துறை கைவினை கிராமத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மணவெளி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 25 பெண்களுக்கு அலங்கார நகைகள் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.