காரைக்கால் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் மூன்று அரியர் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.