புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய இயக்குனராக பொறுப்பேற்றுள்ள வீர் சிங் நேஹி அவர்கள் இன்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் புதுச்சேரி மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் ஜிப்மர் மருத்துவமனை செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.