காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த சுமார் 15000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஜி. என். எஸ் அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் சார்பில் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை சீனி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் நெய் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.