புதுச்சேரி காவல்துறை சார்பில் காரைக்கால் திருப்பப்பட்டினம் காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் என்ற பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம் புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அவர்கள் தலைமையில் நாளை 22.03.2025 காலை 11.00 மணி முதல் 1:00 மணி வரையில் நடைபெற உள்ளது. மேலும் திருநள்ளாறு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற உள்ளது என்று காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.