காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக புதிய வணிக ஆண்டு துவக்கத்திற்கான சிறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பூவம் கனரா வங்கியின் மேலாளர் தினேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இறுதியில் மாணவர்களுக்கிடையே சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.