காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் என். ஐ. டி கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் புதுச்சேரி மாநில இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் மையமும் இனைந்து நடத்தியது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் திமானது எங்கள் நிலம் எங்கள் எதிர்காலம் என்ற தலைப்பை மையமாகக்கொண்டு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.