காரைக்காலில் அமைந்துள்ள என். ஐ. டி தேசிய தொழில்நுட்ப கழக கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக “தொலைநிலை உணர்தல் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள்” என்ற தலைப்பில் ஏழு நாள் கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் வளாகத்தில் தொடங்கியது. இக்கருத்தரங்கிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதியுதவி அளித்துள்ளது.