காரைக்கால் மாவட்டம் வடக்கு தொகுதிக்குட்பட்ட கீழகாசாக்குடி மேடு, கிளிஞ்சல் மேடு மற்றும் காரைக்கால் மேடு ஆகிய மீனவ கிராமங்களின் 6 - அங்கன்வாடி மையங்களில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் போர்வை மற்றும் காலணிகள் 300 பயனாளிகளுக்கு இன்று (ஜூலை 5) புதுச்சேரி மாநில அமைச்சர் திருமுருகன் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.