காரைக்கால் கிளிஞ்சல் மேடு கிராமத்தை சேர்ந்த அஞ்சப்பன் என்பவரது மனைவி ருக்குமணி உடல்நல குறைவால் உயிரிழந்தார். பின்னர். அவர்களின் கணவர் மற்றும் பிள்ளைகள் சம்மதத்துடன் இறந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளார்கள். எனவே அவருடைய இறுதிச் சடங்கில் புதுவை அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.