காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில் நகரப் பகுதிக்கு அவசர காலத்தில் வெளியேற ஏதுவாக, கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்புக்கு புதிதாக சாலை அமைக்க மீனவர்கள் கோரி வருகின்றனர். இதனை அடுத்து புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிளிஞ்சல்மேடு பகுதியில் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிராமப் பஞ்சாயத்தார்களும் கலந்துகொண்டனர்.