நல்லாட்சி வாரத்தின் நான்காவது நாளான இன்று (டிசம்பர் 22) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கணித மாமேதை ராமானுஜர் பிறந்த நாள் மற்றும் உலக கணித நாளை முன்னிட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் வீட்டுக்கோரு விஞ்ஞானி கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் கணித நாளை முன்னிட்டு நடைபெற்ற கணிதம், அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகளையும், புத்தகங்களையும் வழங்கி வாழ்த்தினார்.