காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தீக்குழியில் இறங்கி மகா மாரியம்மனை வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மாரியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.