உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு இன்று நள்ளிரவு சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்துடன் தங்ககாக்கை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக சனீஸ்வர பகவானுக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வீதியுலா வந்தார். நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.