புதுச்சேரி மாநிலத்தில் விடுபட்ட மாணவ மாணவிகளுக்கு கடந்த சட்டமன்றத்தில் அறிவித்ததன் அடிப்படையில் மடிக்கணினி ( LAPTOP ) பதிலாக அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் புதுச்சேரி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த மாதமே செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ கோரிக்கைக்கு உறுதியளித்தார்கள்.