காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு 8கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன எம். ஆர். ஐ ஸ்கேன் அமைக்க புதுச்சேரி சட்டப்பேரவையின் மதிப்பீட்டு குழு தலைவர் நாஜிம் எம். எல். ஏ அரசுக்கு வலியுறுத்திய நிலையில் முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் அளித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் பணிகளை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.