காரைக்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இலவச குடிநீர் பந்தல்

59பார்த்தது
காரைக்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இலவச குடிநீர் பந்தல்
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இலவச குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பந்தலில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் நிகழ்வை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் இன்று (ஏப்ரல் 15) தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி